தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கலை - பண்பாட்டைப் பறைசாற்றும் நெய்தல் கலை விழா மற்றும் புத்தகத் திருவிழா நடைபெற்றது, இதில் சிறப்புரை ஆற்ற தூத்துக்குடி பாரளுமன்றம் உறுப்பினர் திருமதி மு.க. கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி மக்கள் சார்பாக முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையினர் உள்ளிட்ட பெரும்பாலானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடியில் நடைபெற்று முடிந்த மாவட்ட மகளிர் அணி மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. கனிமொழி முன்னிலை வகித்துக் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment