சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

நேற்றைய தினம் பூமி பூஜை நடைபெற்று முடிவடைந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பாக மானாமதுரையில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் கொடியேற்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர், அரசுத் துறை அதிகாரிகளும், திமுக ஒன்றிய செயலாளர் துரை ராஜாமணி, நகராட்சித் தலைவர் எஸ். மாரியப்பன்கென்னடி, காவல்துறை அதிகாரிகளும், பத்திரிகை நண்பர்களும், சுற்று வட்டார பொதுமக்களும் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment