சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிராமப்புறங்களில் சாலை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மானாமதுரை தொகுதியில் உள்ள காஞ்சிரங்குளம் எனும் கிராமத்தில் ரூபாய் 1 கோடியே 5 இலட்சம் மதிப்பீட்டில் இருவழித் தார்சாலைக்கான பணியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் மலர்தூவித் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சாலைக்கான கள ஆய்வுப் பணிகளை பார்வையிட்டார், பின் பொறியாளர்களிடம் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன், திமுகவின் நகர செயலாளர் நாகூர்ஹனி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர், ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக கிளை செயலாளர்கள், பொதுமக்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment