சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயமான 'திரு இருதய ஆண்டவர் திருத்தலம்' மற்றும் மானாமதுரை ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள 'குழந்தை தெரசாள்' ஆகிய ஆலயங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை சாவை நினைவு கூறும் உயிர்த் தெழுதலுக்கு முந்தைய நாளான 'புனித வெள்ளி' கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிலுவை பாதையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை இரவு உயிர்த்தெழுந்தல் திருப்பலி நிறைவேறியது. மேலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்தல் நாளான உயிர்ப்பின் ஞாயிறான இன்று "ஈஸ்டர் பண்டிகை" வெகு விமரிசையாக நள்ளிரவு முதலே கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் ஆலய பங்கு தந்தை மற்றும் திருச்சபையை சேர்ந்த மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டு தங்களுக்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி மகிழ்கின்றனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்

No comments:
Post a Comment