சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஊராட்சி வள திட்டத்தின் கீழ் மூன்று சக்கர ஊர்தி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் திராவிட மாடல் ஆட்சியை திமுக தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டங்களில் தமிழக மக்கள் என்னற்ற பயன்கள் அடைந்து வருவதாகவும், அதில் இதுவும் ஒன்று என பேசிய உறுப்பினர் அவர்கள், என் சார்பாகவும் பயன் பெற்ற தொகுதி மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் இவ்விழாவில் திமுக நகர் கழக, ஒன்றிய கழக, வட்டார கழக தொன்டகளும் ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர் மன்ற தலைவர்கள், நகர் மன்ற உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
- செய்தியாளர் ஜே. கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment