சிவகங்கை அருகே மஞ்சுவின் திடல் திறப்பு; கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 April 2023

சிவகங்கை அருகே மஞ்சுவின் திடல் திறப்பு; கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கண்டரமாணிக்கம் ஊராட்சியில் 2022-2023 மானிய நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி) நிதியின் கீழ் ரூ.06.97 இலட்சம் மதிப்பீட்டில் மஞ்சுவிரட்டு திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடையினை திறந்து வைத்தார்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கண்டரமாணிக்கம் ஊராட்சியில் 2022-2023 மானிய நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி)  நிதியின் கீழ் மஞ்சுவிரட்டு திடலில் புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் மேடையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில்  திறந்து வைத்து, தெரிவிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 


அதில், குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழும் வகையில் சில பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், பொங்கல் திருநாளினை முன்னிட்டும் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ஆகியவைகளை முன்னிட்டும் பல்வேறு பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பயன்பெறச் செய்வது மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறையாக மேற்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களின் மூலம் அதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டரமாணிக்கம் ஊராட்சியில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகென, மஞ்சுவிரட்டு திடலில் புதிதாக விருந்தினர் மேடை அமைப்பதற்கென, 2022-2023 மானிய நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி)  நிதியின் மூலம் ரூ.06.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய விருந்தினர் மேடை சிறப்பாக கட்டப்பட்டு, இன்றையதினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்று, பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி உறுப்பினர்  லெ.மஞ்சரி லெட்சுமணன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad