சிவகங்கை மாவட்டம் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் பயணிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மானாமதுரை தொகுதியில் உள்ள விளத்தூர் கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 9 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டினார்கள்.

நிகழ்ச்சியில் விளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பாலகுருநாதன், கிளைக் செயலாளர் மருது, புவியரசு, அக்கட்சியின் முன்னோடி பாஸ்கரன், தேசிங்குராஜா, பசளை சிவா, வேங்கை சுந்தரம், சசி பிரசாத், செங்கிஸ்கான், இலக்கிய அணி சுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment