சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் வார்டு 23இல் என் குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் உறுதி மொழியை ஏற்று காரைக்குடி பெருநகரத்தை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது மரக்கன்றுகளை நட்டு மேலும் காரைக்குடி பெருநகரமானது பசுமை நகரமாக இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார், உடன் நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர், பிருந்தா மற்றும் நகர்மன்ற உறுப்பினர் சத்யா கார்த்திகேயன், சோனா கண்ணன், முகமது சித்திக், விஷ்ணு பெருமாள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வைரவன், திமுக வட்டச் செயலாளர் சிவகுமார், இளைஞர் அணி கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:
Post a Comment