சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் முத்தமிழறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்க மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க உறுப்பினர்களை சேர்க்கும் கூட்ட நிகழ்ச்சியை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் சிவகங்கை கழக செயலாளர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகர் கழக செயலாளர் க. பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் திரு சேங்கைமாறன், மானாமதுரை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட கழக, நகர் கழக, ஒன்றிய கழக, வட்ட கழக, பொதுக்குழு நிர்வாகிகள், நகர் மன்ற நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment