விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், உழவர் இதழ் கையேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 April 2023

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், உழவர் இதழ் கையேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்னை விவசாயத்தில் வெள்ளை ஈ கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல், மானியத்தில் வெள்ளை பி.வி.சி.பைப் வழங்கக் கோருதல், பி.எம்.கிசான் உதவித்தொகை வழங்கக் கோருதல், பருவமழை தவறிய நெற்பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோருதல், நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், பயிர்சேதம் வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், போர்வெல் மானியம் கோருதல், சீமைக்கருவேல் மரங்களை அகற்றிட வாடகையில்லா ஜே.சி.பி.இயந்திரம் வழங்கக் கோருதல், அரசு மானியத்தில் டிராக்டர் வழங்கக் கோருதல், மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கக் கோருதல், புதிய கால்நடை மருந்தகம் அமைக்கக் கோருதல், கூடுதலாக பால்பண்ணை வைக்க கடன் உதவி வழங்கக் கோருதல், நியாயவிலைக்கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக் கோருதல், கண்மாயில் உள்ள ஆதாழை செடிகளை அகற்றக் கோருதல், கண்மாய் கழுங்கை சீரமைக்கக் கோருதல், பிரதான கால்வாய் சரிசெய்து தரக்கோருதல், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கக் கோருதல், பழுதடைந்த மின்கம்பம் அகற்றக் கோருதல், இலவச மின்சாரம் கோருதல், மின்கம்பங்களை சரிசெய்து தரக்கோருதல், தரைமட்டப் பாலத்தினை உயர்மட்ட பாலமாக கட்டக் கோருதல், சாலையை சீர் செய்து தரக்கோருதல், கிராம இணைப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோருதல், ஊராட்சிச் சாலையை தரம் உயர்த்தி மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரக்கோருதல், இலவச வீட்டுமனை வழங்கக் கோருதல்,  இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோருதல், பால்கொள்முதல் செய்யக் கோருதல், மானியத்தில் ஆடு, மாடு கொட்டகை அமைத்து தரக்கோருதல், குடிநீர் வசதி கோருதல், மயானத்திற்கு செல்லும் சாலையை சீர்செய்து தரக்கோருதல், நெல்கதிர் வைக்கும் கலத்தை சீர்செய்து தரக்கோருதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மூடிகள் அமைத்துத் தரக்கோருதல், சமுதாயக்கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோருதல், கண்மாய் மற்றும் குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோருதல் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 


மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 


இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக,  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 

மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு


உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். 


இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உழவர் இதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட, அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.இரா.சிவராமன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.நாகநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஆர்.தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி கு.சுகிதா (சிவகங்கை), திரு.பால்துரை (தேவகோட்டை), மற்றும் முதல்நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad