சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில், இக்கோவிலில் வருடா வருடம் சித்திரை திருவிழா மிகவும் விமர்சையாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருட சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றுக்குள் ராட்டிணங்கள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ராட்டினங்கள் குத்தகைதாரர்களால் குத்தகைக்கு எடுத்து நிறுவும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தாரமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா முடிந்தவுடன் அடுத்தபடியாக சித்திரை திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாக்களில் மதுரைக்கு அடுத்தபடியாக இங்கு கொண்டாடப்படும் திருவிழா வெகு விமரிசையாவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment