
அப்பயிற்சியைப் பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் பத்து மாணவ, மாணவிகள் டி சி எஸ் மென்பொருள் நிறுவனம் நடத்திய வேலை வாய்ப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அந்நிறுவனத்தின் பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர். இறுதி ஆண்டு பயிலும் பொழுதே டிசிஎஸ் நிறுவனத்தில் பணிநியமன ஆணையைப் பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் சௌந்தர்ய லட்சுமி, கௌசல்யா, அருண்குமார், முத்துராஜா, தாமரைச்செல்வி, ஸ்வேதா, அருணா தேவி, ஸ்ரீராம், விமல் ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் முருகேசன், நான் முதல்வன் திட்ட தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் டிசிஎஸ் திட்ட ஒருங்கிணைப்பாளருமான இணைப் பேராசிரியர் முருகன் மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கே சி சந்திரசேகரன், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகமையின் ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியர் போதகுரு ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment