தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கையில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடியில் புதிய தீயணைப்பு நிலையத்தை காணொலி காட்சி மூலமாக ஏற்கனவே திறந்து வைத்தார்கள்.

இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்ந்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மானாமதுரை தொகுதியில் உள்ள ராஜகம்பீரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment