ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில், ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 April 2023

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில், ஆட்சியர் ஆய்வு.


சிவகங்கை மாவட்டம், கல்லல், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவைகளின்  செயல்பாடுகள் மற்றும்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆண்டாய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தில்,  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்  ஆகியவைகளின்; செயல்பாடுகள் மற்றும்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர், தற்போது அனைத்து அலுவலகங்களிலும் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


அதன்படி, இன்றைய தினம் கல்லல், சாக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்தாய்வின் போது, சம்மந்தப்பட்ட அலுவலகங்களில்  பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவைகள் குறித்தும் மற்றும் இ-சேவை மையம், நிலஅளவை பிரிவு, வட்ட வழங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளிலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும்  வளர்ச்சித்  திட்டப்பணிகளில்  முடிவுற்றுள்ள பணிகள்,  நடைபெற்று வரும் பணிகள்  மற்றும்  அரசின்  பல்வேறு  நலத்திட்டங்களின்   கீழ்     துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


மேலும், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, தேவக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உதவி திட்ட அலுவலர்கள் சேகர் (கல்லல்), இளங்கோ (சாக்கோட்டை), காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், செழியன் (கல்லல்), ஊர்காவலன், தவமணி (சாக்கோட்டை), உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad