தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்துட்டு புலித்தேவன் அவர்களின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மாவீரர் திரு.வெண்ணிகாலாடி அவர்களின் திருஉருவச் சிலையை நிறுவ உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் நேரில் சந்தித்து நன்றியிணை தெரிவித்தார்.

மேலும் முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பத்திரிகையாளர்களின் குரலாக சட்டமன்றத்தில் அடிப்படை தேவை வேண்டிய கோரிக்கைகளை வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு திருவுருவ சிலைகளை நிறுவும் விதமாக நமது வரலாறு வீரர்களை இந்த இளம் தலைமுறையினர் நினைவில் கொள்ள உதவுவதோடு தமிழ் சமூகமானது இந்திய வரலாற்றில் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதையும் சமூக அக்கறை கொண்டு வெளிக்கொணரும் விதமும் ஆகும் என்கின்றனர்.
No comments:
Post a Comment