சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன்பு ராகுல் காந்தியின் பேச்சுரிமை பறிக்கும் விதமாக அவரது MP பதவியை பறித்த மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.அப்துல் சித்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் SM. பழனியப்பன் மற்றும் RGPRS சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வழக்கறிஞர் பிரிவை சார்ந்த மாநிலச் செயலாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் பிரபாகர், மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், வீரபாண்டி, ஷரீஃப், சஞ்சய் மற்றும் RGPRS சாக்கோட்டை மற்றும் கல்லல் வட்டார ஒருங்கிணைப்பாளர் சொ.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment