சிவகங்கையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 April 2023

சிவகங்கையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்.


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.92,760 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 322 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840 வீதம் ரூ.27,360 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் ரூ57,500 மதிப்பீட்டிலான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ7,900 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியினையும் என, ஆக மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.92,760 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட வருவாய் அலுவலர், வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ)  பி.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad