சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் "அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு" முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பின்னர் திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி ஒன்றியத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் MA. கடம்ப சாமி, திமுக பேரூர் செயலாளர் நாகூர்கனி, ஈஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்களும், மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment