அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2019- 2020, 2020-2021 மற்றும் 2021-2022-ம் கல்வியாண்டுகளில் பயின்று பட்டம் பெறத் தகுதியான இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 25/4/2023,26/4 /2023, மற்றும் 27/4/2023 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரியின் உமையாள் கலையரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் துறைத் தலைவர்களிடம் பட்டமளிப்பு சார்ந்த விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment