அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி, தேசிய மாணவர் படை சார்பில் புது தில்லி ராஜ்பத்தில் நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்த தேசிய மாணவர் படை மாணவி செல்வி M. ஸ்ரீநிஜிதாவிற்கு பாராட்டு விழாவும், தேசிய மாணவர் படை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பிரிவு உபசரிப்பு விழாவும் கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் பாரதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை உரையாற்றினார். காரைக்குடி என்சிசி 9 பெட்டாலியன் சுபேதார் மேஜர் சங்கர் முன்னிலை வைத்தார். திருப்புத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் சிறப்புரையாற்றி மாணவி நிஜிதாவை பாராட்டினார். தேசிய மாணவர் படை மூன்றாம் ஆண்டு மாணவர் கணேஷ் பாண்டியன் நன்றியுரையாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment