டாக்டர்.கலைஞர், ஏழை, எளியோர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் அத்திட்டங்களை பின்பற்றுகின்ற வகையில், சிறப்பாக நிர்வாகத்தை தமிழகத்தில் மேற்கொண்டார்கள். அதில், குறிப்பாக தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, அனைத்துத்தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமான முறையில் வசித்திடும் பொருட்டும், முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்திடும் பொருட்டும், வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கிலும், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக, தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் திகழ்ந்தது.
டாக்டர்.கலைஞர், வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு தற்போது புத்துயிர்யூட்டி, கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மொத்தம் 7 சமத்துவபுரங்களை ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கடந்த 24.12.2022 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி, சிறப்பித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் வசித்து வரும் ஹாசினிஸ்ரீ என்ற பெண் குழந்தை தனதுூ தோழியர்களுடன் இப்பகுதிக்கு பூங்கா வேண்டுமென, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம், கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில்; இப்பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என, அக்குழந்தைகளிடம் கனிவுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பாக கட்டி முடிக்கப்பட்ட அச்சிறுவர் பூங்கா, கடந்த 14.04.2023 அன்று மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மேற்கண்ட சிறுமியர்களின் வாயிலாக பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், சிறுமி ஹாசினிஸ்ரீ மகிழ்வுடன் தெரிவிக்கையில், எனது பெயர் ஹாசினிஸ்ரீ, நான், சிறுகூடல்பட்டியில் உள்ள தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறேன். எங்களது சமத்துவபுரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், கடந்த 24.12.2022 அன்று வருகை புரிந்தார். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டாக்கள் வழங்கினார். மருந்து பெட்டகங்கள் வழங்கினார். என்னைப்போன்று நிறைய குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர். எங்களுக்கு விளையாடுவதற்கு தனி இடம் இல்லாமல் இருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர், இங்கு வருகை புரிந்த அன்று, அவர்களிடம் எங்களுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறுவர் பூங்கா அமைத்து தரும்படி எனது தோழிகளுடன் அன்புடன் கேட்டேன். அவரும் எங்களுடன் கனிவுடன் பேசினார். நான் அவரிடம் எனது நோட்டுப் புத்தகத்தில் அவரது கையொப்பமும் பெற்றுக் கொண்டேன். அச்சமயம் எங்களுடன் மகிழ்வுடன் பேசிய அவர், விரைவில் உங்களுக்கு இங்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என அன்புடன் எங்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் கூறிய சில தினங்களில் அதற்கான வேலைகள் இங்கு தொடங்கப்பட்டு, அழகான சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது எங்களது பகுதியிலேயே நாங்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா உள்ளது. நாங்கள் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் உள்ளோம்.
இதற்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எங்களுக்கு உடனடியாக சிறுவர் பூங்கா ஏற்படுத்தித்தந்த விளையாட்டுத்துறை அமைச்சர், எங்களைப் போன்ற குழந்தைகளின் வாயிலாக மகிழ்ச்சியுடன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சிறுமி ஹாசினிஸ்ரீ அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment