சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட கட்டிக்குளம் ஊராட்சியில் ரூ. 30 கோடி மதிப்பீட்டிலான வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கான அடிக்கல்லை மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு கே.ஆர். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன் ரெட்டி அவர்களும் முன்னிலை வகித்தனர்.
மேலும் நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் திமுக செயலாளர்களும், ஒன்றிய திமுக செயலாளர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்

No comments:
Post a Comment