மானாமதுரை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் தன் பிறந்த நாளான இன்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொது மக்களுக்கு உற்சாகமாக கேக் வெட்டி எல்லோரும் வழங்கி தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார், பின்பு தொண்டர்களிடம் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னாள் தலைவர்களான திரு அண்ணாதுரை, திரு மு. கருணாநிதி அவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி ஆசி பெற்றதோடு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ஆட்சிக்கும் கட்சிக்கும் நன்மதிப்பைப் பெற்றுத் தருவேன் என்று தன் பிறந்த நாளில் தெரிவித்துக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தன் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment