இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தற்போது 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதில் மானாமதுரை மண்பாண்டத்திற்கு இந்தக் குறியீடு கிடைத்திருப்பது மானாமதுரை மக்களிடமும், மண்பாண்ட தொழிலாளர்களிடமும், கலைஞர்களிடமும் பெரும் வரவேற்பையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளது.

இந்த சிவகங்கை சீமையின் மண்ணின் பெருமையை மண்பாண்டங்கள் மூலமாக உலகிற்கு எடுத்துச் செல்ல இந்த அங்கீகாரம் உதவும் என்கின்றனர் இந்த மண்ணின் மக்கள். ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழியாக செல்லும் போது இந்த மண்பாண்டங்களை பார்த்து செல்வதும் வாங்கி மகிழ்வதும் வழக்கம், இந்த அங்கீகாரத்தின் மூலமாக எங்களுடைய மண்பாண்ட தொழிற்சாலைகள் ஒரு சுற்றுலா தளமாகவும் அருங்காட்சியமாகவும் பார்க்கப்படுகிறது என்கின்றனர் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள்.
சமீபத்தில் கூட மானாமதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் அருங்காட்சியகம் தமிழக அரசால் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment