அவரிடம் ரூ.10 லட்சம் கடனாக கேட்டுள்ளார். அதற்கு அன்பு அவரிடம், ‘‘ரூ.10 லட்சம் கடனுக்கு முன்பணமாக ரூ.5 லட்சம் தாருங்கள். 10 நாளில் பணம் ரெடி செய்து தருகிறேன். அப்போது நீங்கள் தந்த ரூ.5 லட்சத்தையும் சேர்த்து 15 லட்சமாக தருகிறேன்’’ என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய மகாலெட்சுமி வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் அடமானம் வைத்து ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால், பேசியபடி அன்பு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் மகாலெட்சுமி காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அன்புவை கைது செய்து அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.500 நோட்டுகள் மட்டும் மேல்புறத்தில் வைத்து ரூ.3 கோடி மதிப்பிடக்கூடிய அளவு உள்ள பேப்பர் பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதில் ரூ.10 ஆயிரம் மட்டும் நல்ல நோட்டுகள் இருந்தன. மீதி அனைத்தும் பேப்பர் பண்டல்கள். கடன் வாங்க வருபவர்களிடம் பணம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது சமூக விரோத செயல்களுக்கு இந்த பேப்பர் பண்டல் பணத்தை பயன்படுத்த திட்டமிட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment