பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத்தொகை பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றியினைத் தெரிவித்தனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 March 2023

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத்தொகை பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றியினைத் தெரிவித்தனர்.


தமிழ்நாடு முதலமைச்சர், நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களின் நலன் காத்திடும் வகையில், வேளாண்மை சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகளின் உற்றத்தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். அதன்படி, வேளாண் பெருங்குடி மக்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.25 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என,  தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 06.02.2023 அன்று அறிவித்தார்கள். அதன்படி, நமது சிவகங்கை மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பயிர்ச்சேத கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டனர். 


அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் 82,290 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி மழையளவான 413.4 மி.மீக்கு பதிலாக 305.61 மி.மீ பெறப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் மழை பெறப்படவில்லை.  பிப்ரவரி 1-ஆம் தேதி 18.33 மி.மீ மழையும், 2-ஆம் தேதி 32.2 மி.மீ மழையும், 3-ஆம் தேதி 2.16 மி.மீ ஆக மொத்தம் 52.84 மி.மீ 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் பெறப்பட்டது.  இதில் சராசரி மழையளவு பிப்ரவரி மாதம் 13.6 மி.மீ. பெறப்பட்ட மழையளவு 52.84 மி.மீ. இது சராசரியை விட 39.24 மி.மீ அதிகமாகும். மேலும், பிப்ரவரி 2-ஆம் தேதி சிவகங்கையில் 29 மி.மீ, தேவகோட்டை தாலுகாவில் 64.08 மி.மீ, காரைக்குடியில் 49 மி.மீ, மானாமதுரை 16.05 மி.மீ, இளையாங்குடி 24.06 மி.மீ, காளையார்கோவில் 41 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.


பருவம் தவறிய மழையினால் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, சாக்கோட்டை, கல்லல் ஆகிய வட்டாரங்களில் நெல் பயிர் அறுவடை நிலையில் சாய்ந்து பாதிப்படைந்தது. இது குறித்து, தமிழக அரசின் உத்தரவின்படி, பயிர் பாதிப்படைந்த விபரம் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் கூட்டுத்தணிக்கை செய்த பின் விவசாயிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.


அதன்படி, சிவகங்கை வட்டாரத்தில் 2 கிராமங்களில் 32 விவசாயிகளுக்கு 11.08 எக்டர் பரப்பிற்கு ரூ.2,21,600 மதிப்பீட்டிலும், காளையார்கோவில் வட்டாரத்தில் 3 கிராமங்களில் 7 விவசாயிகளுக்கு 3.70 எக்டேர் பரப்பிற்கு ரூ.74,000 மதிப்பீட்டிலும், தேவகோட்டை வட்டாரத்தில் ஒரு கிராமத்தில் 65 விவசாயிகளுக்கு 27.10 எக்டேர் பரப்பிற்கு ரூ.5,42,000 மதிப்பீட்டிலும், கல்லல் வட்டாரத்தில் 2 கிராமங்களில் 14 விவசாயிகளுக்கு 6.48 எக்டேர் பரப்பிற்கு ரூ.1,29,600 மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டாரத்தில், 4 கிராமங்களில் 42 விவசாயிகளுக்கு 11.95 எக்டேர் பரப்பிற்கு ரூ.2,39,200 மதிப்பீட்டிலும், சாக்கோட்டை வட்டாரத்தில் 160 விவசாயிகளுக்கு 69.4235 எக்டேர் பரப்பிற்கு ரூ.13,90,070 மதிப்பீட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கணக்கெடுக்கப்பட்டது.


அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 320 விவசாயிகளுக்கு, 129.7335 எக்டேர் பரப்பிற்கு மொத்தம் ரூ.25,96,470 மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கென அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி,  தமிழ்நாடு முதலமைச்சர்,  உத்தரவின்படி, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 


இதன் மூலம் பயன்பெற்ற சாக்கோட்டை வட்டாரம், வ.சூரக்குடி கிராமத்தைச் சார்ந்த விவசாயி ச.வீரபெருமாள்  தெரிவிக்கையில்,  நான், 3 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வரும் சிறு விவசாயி ஆவேன். நான் பாரம்பரிய நெல் மற்றும் மற்ற நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். சிறப்பான முறையில் நான் விவசாயம் செய்து, அதன்மூலம் எனது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறேன். தற்போதும் அதேபோன்று, நேர்த்தியான முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்திருந்தேன். அறுவடையாகும் நேரத்தில் எதிர்பாரதாக விதமாக பருவம் தவறிய மழையின் காரணமாக, நிலத்தில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டது. 


இதனால், எனது வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில் நான் இருந்தேன். என்னைப் போன்ற பாதிப்பிற்க்குள்ளான விவசாயிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் உத்தரவின்படி, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசிற்கு பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பித்தனர். அதனடிப்படையில் நாங்கள் பாதிக்கப்பட்ட 4-வது நாளிலேயே 1 ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் எனது வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டது. என்னைப்போன்ற விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் பாதுகாவலனாக திகழ்ந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், நெஞ்சார்ந்த நன்றியினை அனைத்து விவசாயப் பெருமக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என விவசாயி தெரிவித்தார்.


இதன் மூலம் பயன்பெற்ற தேவகோட்டை வட்டாரம், உருவாட்டி கிராமத்தைச் சார்ந்த விவசாயி பி.ரமேஷ்பாபு  தெரிவிக்கையில்,


நான், 5.50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். நான் விவசாயம் செய்வதற்கு தேவையான விதை நெல்கள், நுண்உரங்கள், ஜிப்சம் போன்ற பொருட்கள் வேளாண்மைத்துறையின் மூலம் மானிய விலையில் பெற்று, விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். அறுவடை நேரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் பெய்த பருவம் தவறி பெய்த கனமழையினால் எனது நெற்பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகியது. இப்பாதிப்புக்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன்படி,  தமிழ்நாடு முதலமைச்சர், கருணை உள்ளத்தோடு, ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்குவதற்கான அரசாணை பிறப்பித்து, உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும்படியும் உத்தரவிட்டார்கள். அதன்படி, என்னைப் போன்ற பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் அனைவரின் வங்கிக்கணக்கிலும் அந்நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டது. 


விவசாயிகளின் நலனிற்காக மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்துவது மட்டுமன்றி, நாங்கள் பாதிப்பிற்குள்ளாகும் நேரங்களிலும், எங்களுக்கு உறுதுணையாக இருந்து, விவசாயிகளின் உற்றத்தோழனாக திகழ்ந்து வரும்  தமிழ்நாடு முதலமைச்சர், மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, விவசாயி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad