சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் முலம் குற்றவாளிகள் கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 17 March 2023

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் முலம் குற்றவாளிகள் கைது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் இவர் சில நாள்களுக்கு முன்பு காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி கொண்டு 11.03.22  அதிகாலை காரைக்குடியிலிருந்து சென்னைக்கு சென்று சவுகார்பேட்டை நகை பேக்டரியில் கொடுத்து விட்டு, அங்கிருந்து நகைக்கடை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய சுமார் 1 கிலோ தங்க நகை மற்றும் பணம் 2 கோடியே ஒரு லட்சம் ஆகியவற்றை பேக் மற்றும் கட்டைப்பையில் வைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் 12.03.23 காலை 5 மணியளவில் காரைக்குடி கழனிவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியனார்.

அங்கிருந்து இன்னோவா காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக காரில் பின்புறம் சீட்டில் ஏற்றி கடத்திக்கொண்டு சென்றுனார். திருச்சி சாலையில் மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி குறுக்கு சாலையயைக் கடந்து சென்ற போது இரவிச்சந்திரனை கீழே தள்ளிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் அவர்களது ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் சரக  காவல் துறை துணை தலைவர் அவர்களது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களது மேற்பார்வையில், காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் IPS அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம்  ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு கொண்டனர்.


ஒவ்வொரு தனிப்படையும் வெவ்வேறு விதமான பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இன்னோவா காரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்மூலம் குற்றவாளிகளான சென்னையைச் சேர்ந்த சூரியா என்ற நாகேந்திரன், பால்ராஜ், விஜயகுமார், சாமுவேல், சதீஸ் மற்றும் பெருமாள் ஆகியோரை கைது செய்தனார். அவர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் மற்றும் நகைகளை மீட்டனர். 


இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தனிப்பபடையினரின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad