மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 March 2023

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்


மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை  ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில்,  அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு, துறை ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. தலைமையில்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அப்பணிகள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும், மேம்படுத்தும் விதமாகவும், நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மட்டுமன்றி, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், துறைரீதியான முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்து துறை சார்நத அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளும் பொருட்டு, இக்கூட்டமானது நடைபெற்று வருகிறது. 


ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கலாம். நேற்றையதினம் பல்வேறு துறைகளின் சார்பில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இக்கூட்டம் நிறைவுற்ற பின் மேலும் சில துறைகள் ரீதியான களஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன், தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா, தெரிவித்தார். 


இக்கூட்டத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், விளையாட்டுத்திடல் மற்றும் பேரிடர் மேலாண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும், தேவையான நிதிநிலைகள் உள்ளிட்ட  அனைத்து விபரங்களையும் துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர்.


அதனைத்தொடர்ந்து, சிவகங்கை நகராட்சிப் பகுதியிலுள்ள பொது நியாயவிலைக்கடையின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மருந்துக் கிடங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தன் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்கென, சேமிக்கப்பட்டுள்ள சிறப்பு உணவுப்பொருட்கள் குறித்தும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிகண்டம் ஊராட்சி மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும்,


மேலும், முத்துப்பட்டி ஊராட்சியில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று, சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.இரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad