அதனடிப்படையில், ஆரோக்கியமான வயதிற்கேற்ப வளர்ச்சி, உடல் எடை, மனம் நலம் போன்றவை பொதுவான முறையில் உள்ள குழந்தைகள் மட்டுமே எவ்விதத் தங்கு தடையின்றி சிறந்த முறையில் கல்வி கற்கவும், பிறதுறைகளில் ஈடுபடவும் முடியும். எனவே, 0 வயது 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடை, உயரம், அளவு போன்றவை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் ஊட்டச்சத்தின் நிலை கண்டறியப்படும்.

வயதிற்கேற்ற எடை குறைதல் அல்லது கூடுதலாக இருத்தல், வளர்ச்சி குறைந்து இருத்தல் போன்றவை கண்டறிந்து, குழந்தைகளின் பெற்றோருக்கு இது குறித்து எடுத்துக்கூறி அவர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்படும். தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கிடவும், குழந்தைகளுக்கு தேவையான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு கற்றுத்தரப்படும். குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் பராமரித்து அவர்கள் சீரான உடல்நிலை வரும்வரை ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.
மேலும், பெற்றோர்கள் தங்களது தொழிலுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்ந்து சென்று கொண்டு செல்பவர்களை கண்டறிந்து, அவர்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமகள், மாவட்ட திட்ட உதவியாளர் எஸ்.கீதவர்ஷினி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மு.தாரணி (திருப்பத்தூர்) உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment