மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 March 2023

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், அதன் செயல்பாடுகள் குறித்து, கூடுதல் முதன்மைச் செயலாளர் /  வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்,, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் எளிதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனுக்கள் உள்ளன. அம்மனுக்கள் மீது காலதாழ்த்தாமல் விரைந்து பயன்;களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவிட வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடித்திடவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் வேண்டும். 


பட்டா வேண்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை முறையாக கள ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பது அரசு அலுவலர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். 


மேலும், அரசு அலுவலர்கள் தங்களிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் போது, பெரும் பாலான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காண வழிவகை ஏற்படுகிறது. எனவே, அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும்  என, கூடுதல் முதன்மைச் செயலாளர் / வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து கூடுதல் முதன்மைச் செயலாளர் /வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 


இந்நிகழ்ச்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 வீதம் மொத்தம் ரூ.2,40,000 மதிப்பீட்டிலான பட்டாக்களுக்கான ஆணைகளையும், நலிந்த பிரிவைச் சார்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ5,000 வீதம் மொத்தம் ரூ.25,000 மதிப்பீட்டிலான பட்டாக்களுக்கான ஆணைகளையும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகைக்கான ஆணைகளையும், 9 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.2,65,000  மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கூடுதல் முதன்மைச் செயலாளர் / வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் அவர்கள் வழங்கினார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்  கு.சுகிதா, மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad