அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டமைப்பு மேம்பாடு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 18 February 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டமைப்பு மேம்பாடு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


சிவகங்கை மாவட்டம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்து   மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22,000 மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 


மேலும், 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறுகிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில்; கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.


இம்மருத்துவமனையின், செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து, இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள், இரத்தப் பரிசோதனை மையம், ஆய்வகம், ஸ்கேன் அறை மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் இவ்வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்தல், மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை,  முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை ஆகியன குறித்தும், மேலும், அவ்வளாகத்தில்  இயங்கி வரும் சித்த மருத்துவப்பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, இன்றையதினம் ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வின்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார். இந்த ஆய்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோன்அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் மரு.செந்தில்குமாரி மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad