வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 March 2023

வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியர் ஆய்வு.


வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது (தேர்தல்) அவர்களின் அறிவுரையின்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதன் அடிப்படையில்,  இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்பதற்கு ஏதுவாக, இன்றையதினம் (29.03.2023)  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வின் போது, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad