சிவகங்கையில், மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

சிவகங்கையில், மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு.


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணாக்கர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இன்றைய மாணாக்கர்கள் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்திடும் பொருட்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


மாணாக்கர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் இதுபோன்று வழிகாட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. மாணாக்கர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. 


மேலும், மாணாக்கர்கள் மேல்நிலை கல்வி பயில்வது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புக்கள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு, இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


இந்நிகழ்ச்சியின் வாயிலாக, எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை மாணாக்கர்கள் உள்வாங்கி, தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  சு.தனலெட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்  பா.ராஜேஸ்வரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கே.கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad