இவற்றின் பணி மேலும் சிறப்பாக செயல்படும் வண்ணம் கண்காணித்து பணிகளை விரைவுபடுத்தும் வகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர், இன்றையதினம், 4 நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை பார்வையிட்டதுடன், விவசாயிகள் கொண்டு வரும் நெல் எவ்வளவு துரிதமாக கொள்முதல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு விரைந்து முடிக்க தேவையான பணிகளை திட்டமிட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்ற துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மாவட்டத்தில், செயல்பட்டு வரும் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களையும் தொடர்ச்சியாக, துணை ஆட்சியர் நிலையில் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும், பணியாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் அலுவலர்கள் கண்காணித்து வர வேண்டும்.

அதேபோல், நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் சாலை வசதி, வாகன வசதி, இட வசதி, போன்றவற்றை கூடுதலாக அமைத்திட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு செயல்படும் போது, பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பதுடன் விவசாயிகளும் தாங்கள் கொண்டு வந்த நெல் உடனுக்குடன் விற்பனைக்கு அளித்திட உகந்ததாக இருக்கும்.
அதனடிப்படையில், இதுவரை விவசாயிகளிடமிருந்து 3,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய இலாபம் முழுமையாக கிடைக்கும். விவசாயிகள் இதுபோன்ற அரசு கொள்முதல் நிலையங்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் நா.அருண்பிரசாத் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment