நான் முதல்வன் திட்டம் தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பங்கேற்று சிறப்புரையாற்றினார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2023

நான் முதல்வன் திட்டம் தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நான் முதல்வன் திட்டம் தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில், நான் முதல்வன் திட்டம் தொடர்பாக, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வழிகாட்டு முறைகளை மாணவ, மாணவியர்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் “நான் முதல்வன்” என்ற திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 


பள்ளிப்படிப்பில், மாணாக்கர்கள் படிக்கும் போது, உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது பற்றிய போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டும், கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக்கர்கள் குறிப்பாக, கிராமப்புறங்களைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்நிலைக்கல்வி பயின்று வரும் மாணாக்கர்களுக்கு அனுபவரீதியாக இணையதளம் வாயிலாக கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது. 


அதில், உயர்கல்வியில் இளைஞர்களுக்கான மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ்  புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாக இத்திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டம் நாளுக்கு நாள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.


நான் முதல்வன் இயங்குதளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டத்தின் நோக்கம், சாத்தியமான பயிற்சி வழங்குநர்களைக் கண்டறிந்து, தற்போதைய தொழில்துறை இடைவெளிகளின் அடிப்படையில் பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்குவதாகும். இந்த முதன்மைத் திட்டத்தின் மூலம்இ மாணவர்கள் பயிற்சி பெறவும் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும். மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலையும் உறுதி செய்திடவும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது.


இத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் நோக்கில் கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு அதனடிப்படையில் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 46 கல்லூரிக்களைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்பாகவும் அதில், மேம்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், திறன்மிக்க  வாயிலாகவும் மொத்தம் 12 நாட்கள் பயிற்சி கருத்தரங்குகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இப்பயிற்சி கருத்தரங்கில்  பங்கேற்றுள்ள ஒவ்வொரு கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்களும்  மற்றும் உதவிப் பேராசிரியர்களும் தங்களது பாடப்பிரிவில் சிறந்து விளங்குவீர்கள். இருப்பினும், வளர்ந்து வரும் நவீனகாலத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் நமது அறிவுத்திறனையும் அதற்கு தகுந்தாற்போல் வளர்த்துக் கொண்டே வருவது நமது கடமையாகும். தாங்கள் அறிந்தவை விட இப்பயிற்சி வகுப்பில் புதிதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தங்களின் அறிவுத்திறனை விரிவாக்கம் செய்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். 


இப்பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுவதன் நோக்கம், ஒவ்வொரு பாடப்பிரிவுகளின் வாயிலாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மேலும் புரிதலுடன் கல்லூரி பேராசிரிகள் அறிந்து கொண்டு, மாணாக்கர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நவீனயுத்திகளை அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை பயன்பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.


ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் பயன்களைப் பொறுத்தே அமைகிறது. எனவே, அரசின் திட்டங்களின் வெற்றிக்கு நாம் ஒவ்வொருவரின் பங்களிப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்மோகன் உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், என்.எஸ்.அகாடமி பயிற்றுநர்கள் ராம்குமார் , ராமேந்திரா பாபு, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad