சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கைமாவட்டம் மணலுார் அருகே ஒத்தவீட்டை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மனைவி சீனியம்மாள் 56. இவர்களது மகன்கள் சரவணன் 45, முருகன் 42. 2018ல் சரவணனின் தம்பி முருகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். பெண் கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம், சரவணன் மனைவியை பிரிந்து வாழ்வது பற்றி கேட்டு முருகனுக்கு பெண் தர மறுத்துள்ளனர்.

இதில் அதிருப்தியான சரவணனின் தாய் சீனியம்மாள், மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ சரவணனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். 2018 ஜூன் 18 மதியம் 3: 00 மணிக்கு இது தொடர்பாக சீனியம்மாள், சரவணன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமுற்ற சரவணன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து சீனியம்மாளின் தலையில் போட்டு கொலை செய்தார். திருப்புவனம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி சுமதி சாய் பிரியா, தாயை கொலை செய்த சரவணனுக்கு, ஆயுள் தண்டனை, ரூ. 5000 அபராதம் விதித்தார்.
No comments:
Post a Comment