போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆட்சியர் தகவல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆட்சியர் தகவல்.


சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 11, 409 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு தமிழ் உள்பட 13 வட்டார மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

சிவகங்கை-திருப்பத்தூர் ரோட்டில் உள்ள படிப்பு வட்டத்தில் காலை 9.30 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்படும். எனவே மேற்படி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பரிசுத்தொழிலியின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பாடகுறிப்புக்கள் மற்றும் வினா, விடைகள் மற்றும் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad