JCI காரைக்குடி கிங்ஸின் நேற்று 6-வது பதவியேற்பு விழா காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. இதில் 2023-ஆம் ஆண்டின் தலைவராக S.விஜயன் மற்றும் செயலாளராக M.ராமச்சந்திரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மண்டலம் பதினெட்டின் தலைவர் N.கார்த்திக் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கிளை உறுப்பினர்களுக்கு 2022ஆம் ஆண்டின் தலைவர் B.ராஜீவ் அவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் JCI தேசிய தலைவர்களும் மண்டல தலைவர்களும் கிளை தலைவர்களும் மற்றும் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment