சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம்: ஆட்சியர் தகவல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம்: ஆட்சியர் தகவல்.


தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர்  ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுதிறனுடையோர் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 2022-2023-ம் நிதியாண்டில் மாற்றுத்திறனுடையோர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும்  மாத ஓய்வூதியத்தினை ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கவும், டிசம்பர்’2022 முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி’2023 முதல் வழங்கவும் அரசு ஆணையிடப்பட்டுள்ளது. அதனை, அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பெற்று பயனடைய வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad