சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியனுக்குட்பட்ட முனைவென்றி பகுதியை சேர்ந்தவர் அடைக்கல அருட்செல்வி. இவர் மாசிலாமணி என்பவரது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிரில் தண்ணீர் பாய்ச்சியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாசிலாமணியின் கணவர் குழந்தைசாமி, மகன் கஸ்பார் ஆகியோர் கல்லால் தாக்கியதாக கூறப்படும் நிலையில் படுகாயம் அடைந்த அருட்செல்வி, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அந்த புகாரியின் அடிப்படையில் குழந்தைசாமி, கஸ்பார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment