சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன்களான செந்தில்குமார், மாரி ஆகியோர் உடன் பிறந்தவர்கள், இந்நிலையில் குடும்ப சொத்தான காலிமனை இடத்தை பிரிப்பதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது, இதில் மாரி மனைவி தீபா என்பவர், செந்தில்குமாரின் மனைவி நதியாவை ஆபாசமாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த நதியா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செந்தில்குமார் காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐ சரவணன் போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment