சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே உள்ள 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை போலீசார் மீட்டு வந்து ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் இருந்து அந்த சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமி வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புழுதிபட்டி காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment