அழகப்பா பல்கலைக்கழக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பரிசுகளை குவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சையது ஹமீதியா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்துப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் பரிசையும், அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

No comments:
Post a Comment