வட்ட வழங்கல் அலுவலகங்களில், சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

வட்ட வழங்கல் அலுவலகங்களில், சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்.


வருகின்ற 12.11.2022 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல்.

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு  நவம்பர்; மாதம் இரண்டாவது சனிக்கிழமை (12.11.2022) அன்று காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 


இம்முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைஃநகலட்டை கோரியும் கைப்பேசி எண் பதிவுஃமாற்றம் செய்தல், பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும்; தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனு செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad