சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பிச்சை பிள்ளையேந்தல் கண்மாய் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பாச்சேத்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருப்பாச்சேத்தி காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனையை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திருப்பாச்சேத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜ்குமார் அந்த சிறுவனைசிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment