சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி மற்றும் கலுங்குப்பட்டி ஆகிய ஊராட்சிகளில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், மின்மாற்றிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில்,   குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மனித வாழ்வில் மின்சாரத்தின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், அதன் முக்கிய பங்குகள் குறித்தும் காற்றாலை மின்சாரம், சூரியஒளி மின்சாரம், நீர் மின்சாரம் மற்றும் அனல் மின்சாரம் ஆகியவற்றின் மூலம் தற்போது உற்பத்தி திறன் குறித்தும், வளமான இந்தியா மற்றும் வளமான தமிழகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கி வருகிறார்.

 

அதனடிப்படையில், இப்பகுதியில் மின்மாற்றி விநியோகம் செய்திட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்தவகையில் ரூ.4.66 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 150 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. 


இதுபோன்று, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கலுங்குப்பட்டி ஊராட்சி; மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 110 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. 


மேலும், பொதுமக்களின் தேவைகளை அறிந்தும், கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் ரவி(சிவகங்கை), செயற்பொறியாளர் செல்லத்துரை (திருப்பத்தூர்), ஊராட்சி மன்றத்தலைவர்கள்  ஹேமலதா (எஸ்.மாத்தூர்), திருச்செல்வம் (ஏரியூர்), சிங்கம்புணரி வட்டாட்சியர்  சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஜான் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad