பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சி; மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்து பார்வையிட்டார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சி; மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்து பார்வையிட்டார்.

உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடுகின்ற வகையில், பல்வேறு துறைகளின் சார்பில், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடுகின்ற வகையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டு தெரிவிக்கையில்:


தமிழக முதல்வர், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ்     2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் அன்று ‘உள்ளாட்சிகள் தினம்” ஆக  கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதன்படி, நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளையதினம் கிராம சபைக் கூட்டங்களும் நடைபெறவுள்ளது.


மேலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் துறைகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்;, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பணிகள் குறித்தும் மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்திடவும் மற்றும் அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த குறும்படங்களை காட்சிப்படுத்திடவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

அதன்படி, இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசால் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக அரங்குகள் அமைத்து, தங்கள் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் வகையில், விளக்கக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியானது 2 தினங்கள் நடைபெறுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் அதன் பயன்களையும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.  எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தாங்கள் எந்தத் திட்டங்களின் மூலம் பயன்பெறலாம் என்பதையும், அதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். 


அதற்கு அடிப்படையாக நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் அமைந்துள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிநபர் மற்றும் கிராம மேம்பாட்டிற்காக உறுதுணையாக இருந்திட வேண்டும் என,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். 


இக்கண்காட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொது சுகாதாரத்துறை, சமூகநலத் துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad