அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடமும் ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 31 October 2022

அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடமும் ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடமும் ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, ராஜா கலைக் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சதுரங்கப் போட்டியில் மொத்தம் 22 கல்லூரி அணிகள் பங்கு பெற்றன. 

இதில் சிறப்பாக விளையாடிய அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவிகள் மூன்றாம் ஆண்டு தமிழ் பயிலும் பவித்ரா, இரண்டாம் ஆண்டு தாவரவியல் பயிலும் முத்துலட்சுமி, முதலாம் ஆண்டு கணிதம் பயிலும் உமா சுந்தரி, முதலாம் ஆண்டு பொருளியல் பயிலும் அபிநயா ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் பரிசை பெற்றனர். இதில் மிகச் சிறப்பாக விளையாடிய மாணவி பவித்ரா அழகப்பா பல்கலைக்கழக மகளிர் சதுரங்க அணிக்கு தேர்வு பெற்றார். 


அதுபோல ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் மூன்றாம் ஆண்டு இயற்பியல் பயிலும் ராஜ் முகிலன், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் பயிலும் அபிலாஷ், மூன்றாம் ஆண்டு கணிதம் பயிலும் கண்ணதாசன், முதலாமாண்டு தமிழ் பயிலும் விமல், இரண்டாம் ஆண்டு புவி அமைப்பியல் பயிலும் முத்துக்குமார், முதலாமாண்டு தொழில் நிர்வாகவியல் பயிலும் தினேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு இரண்டாம் பரிசைப் பெற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராஜா கலைக் கல்லூரியின் தலைவர் ராஜா மற்றும் செயலாளர் தில்லை ராஜ்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad