சிவகங்கை மாவட்டத்தில் கணினி இயக்குபவர் பணியிடம்: ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 October 2022

சிவகங்கை மாவட்டத்தில் கணினி இயக்குபவர் பணியிடம்: ஆட்சியர் அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர்  பணியிடத்தில், தகுதிகள் உள்ள நபர்கள் மூலம் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், பிரதி மாதம், ரூ.12,000 (ரூபாய் பனிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதிய அடிப்படையில், தலா ஒன்று வீதம் மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் 01.11.2022 முதல் 15.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சிவகங்கை மாவட்ட இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  தபால் மூலமாகவோ அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேற்கண்ட தேதி , நேரத்திற்கு பின் காலதாமதமாகப் பதிவேற்றம் செய்யும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  இதற்கு விண்ணப்பதாரர்களே பொறுப்பாவர். 


அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தால் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில், அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். கீழ்நிலை தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு 01.10.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஃ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஃ பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  இதர வகுப்பைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. 


மேலும், அரசாணை (நிலை) எண். 91, மனிதவள மேலாண்மைத் (எஸ்.) துறை, நாள்:13.09.2021-ன்படி, வயது உச்ச வரம்பு வரையறுக்கப்பட்ட வயதிலிருந்து 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.  எனவே, வரையறுக்கப்பட்ட வயதிலிருந்து 2 ஆண்டுகள் கூடுதலாக வயது விதித்தளர்வு உள்ளது என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad