மருது சகோதரர்களின் 221வது குரு பூஜை நாளை நடைபெற உள்ளது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

மருது சகோதரர்களின் 221வது குரு பூஜை நாளை நடைபெற உள்ளது.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 221வது குரு பூஜை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்பிக்கள் செந்தில்குமார், கிருஷ்ணராஜ், அன்பு, சிவக்குமார் மேற்பார்வையில் 4 ஏடிஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், திருச்சி, பெரம்பலூர் நாகபட்டினம் மற்றும் பட்டாலியன் போலீசார், போக்குவரத்து போலீசார் மாவட்டம் முழுவதும் 240 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கீழச்சீவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்லை உள்ளிட்ட 15 முக்கிய இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 இடங்களில் ஆன்லைன் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


இரண்டு இடங்களில் சுழலும் கேமராக்கள் மற்ற இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஸ்டில் கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகன பரிசோதனை நடக்க உள்ளது. தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்கு மேல் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad